முகப்பு


ஒன்பது மாதங்களில் நீங்களும் சிறந்த ஜோதிடராகலம்

அடிப்படை நிலை - மூன்று மாதங்கள்

உயர்நிலை - ஆறு மாதங்கள்

மொத்தம் ஒன்பது மாதங்களில் நீங்களும் ஒரு சிறந்த ஜோதிடரே

ஜோதிடம் ஏன் கற்கவேண்டும்?


ஜோதிடத்தின் பயன் என்ன? ஜோதிடத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

இருண்ட பாதையில் பயணிக்கும் ஒருவருக்கு கைவிளக்கு எப்படி பயன்படுகிறதோ, அப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஜோதிடம் பயன்படுகிறது. அதாவது கைவிளக்கு, பாதையில் உள்ள இடையூறுகளை வெளிச்சமிட்டுக் காட்டும். செல்லும் பாதையை நாம்தான் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். அதுபோல ஜோதிடத்தில் உள்ள ராசிமண்டலமும், கிரகங்களும், மனித வாழ்வில் எதிர்காலம் என்ற இருண்ட பாதையில் உள்ள நன்மைதீமைகளை முன்கூட்டியே நமக்கு குறிப்பிடும் காலக்கண்ணாடியாக நமக்குப் பயன்படுகிறது
.
காலக்கண்ணாடியாக செயல்படும் ஜோதிடம் நமக்கு உணர்த்தும் உண்மைகளை உணர்ந்து, ஒவ்வருவரும் அவரவர் வாழ்கையை சீரமைத்துக்கொள்ள வேண்டும்.

இதயே வேறுவிதமாக சொல்லலாம். அதாவது கைவிளக்குடன் ஒருவரும், கைவிளக்கு இல்லாமல் ஒருவரும் ஒரு இருண்ட பாதையில் தனித்தனியாகப் பயணிக்கிறார்கள். பாதையில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. அந்தப்பள்ளத்தை கடந்து செல்ல வேறுவழியில்லை. கைவிளக்கு வைத்திருப்பவர் அந்தப் பள்ளத்தில் நிதானமாக ஒருபுறம் இறங்கி மறுபுறம் ஏறி மீண்டும் பயணத்தை தொடர்கிறார். ஆனால் கைவிளக்கு இலாதவர் அந்தப்பள்ளத்தில் விழுந்து பலத்த அடிபட்டு, அந்தப்பள்ளத்திலிருந்து வெளியேற மிகவும் சிரமப் படுகிறார். இருண்ட பாதையில் உள்ள பள்ளத்தை இருவருமே சந்திகிறார்கள். கைவிளக்கு வைத்திருப்பவர் இழப்பு ஏதுமில்லாமல் சற்று நிதானித்து தன்பயனத்தை தொடர்கிறார். கைவிளக்கு இல்லாதவர் பலத்த  அடிபட்டு பயணத்தை தொடரமுடியாமல் இருக்கிறார். இப்படித்தான் கைவிளக்கு போல ஜோதிடம் பயன்படுகிறது.

ஜாதகம் இருப்பவர்கள் (கைவிளக்கு இருப்பவர்) வாழ்க்கையில் சுதாரித்துக் கொள்ளலாம், ஜாதகம் இல்லாதவர்கள் என்ன செய்யமுடியும்? அவர்களுக்கென்ன வழி? என்று ஒரு கேள்வியை யாரோ கேட்பது எனக்கு கேட்கிறது.

    
    ஜாதகம் இல்லாதவர்களுக்கும் நம்முன்னோர்கள் ஜோதிடத்தில் வழிவகுத்திருக்கிறார்கள். அதுதான் எளிமையான விதிகளைக் கொண்ட சில பிரசன்ன ஜோதிடம். இந்த பிரசன்ன ஜோதிடம் ஜாதகம் இருப்பவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்குமே கைவிளக்காக  பயன்படும்.

      எனவே ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது தன் குடும்பத்தை வழிநடத்த ஜோதிடம் கற்றுக்கொள்வது நன்று.

       சில அரைகுறை ஜோதிடர்களின் தவறான கருத்துகளினால் உங்களுக்கு பாதிப்பு இல்லாமல் நீங்களே உங்கள் வாழ்க்கை பயணத்தை தொடரலாம்.


திருமணப் பொருத்தம் நிர்ணயம் செய்வதில் ஜோதிடர்கள் இடையே பல முரண்பாடுகள் உள்ளது.

செவ்வாய் தோஷம் , நாக தோஷம் உண்மையில் தோஷத்தை செய்யுமா? இதை எலாம் தெரிந்துகொண்டு........

        நீங்கள் உங்கள் வாழ்க்கையை உங்கள் கையிலேயே வைத்துக்கொண்டு,ஜோதிடத்தில் விழிப்புணர்வுடன், மிகைப்படுத்தப் பட்ட சில ஜோதிடக் கருத்துக்களின் (தோஷங்களின்) உண்மை நிலையை அறிந்துகொண்டு,  உங்களை, உங்களின் குடும்பத்தினரை பாதுகாத்துக்கொண்டு, 


அமைதியான வாழ்க்கையை தொடர, நடைமுறையில் எந்தெந்த விஷயங்களுக்கு ஜோதிடத்தை பயன்படுத்தவேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை தெரிந்துகொண்டு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.